உடலில் பல்லி விழும் பலன் என்ன என்று தெரிந்து கொள்வோம்

நம் உடலில் பல்லி விழுந்தால் பலன்கள் என்ன ஏற்படும் அதற்கான பரிகாரம் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளவோம்.

நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கடைபிடித்தனர், அவற்றில் சிலவற்றை நாமும் இன்று வரை கடைபிடித்து வருகிறோம் அதில் ஒன்று தான் பல்லி விழும் பலன், பல்லி கேதுவை குறிப்பதால் கத்துவது முதல் நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்று முக்கியத்துவம் பெறுகிறது. நம் உடலில் விழும் பாகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

தலை, கை, மார்பு, தொடை, நெற்றி, கழுத்து மற்றும் சில பாகங்களின் பல்லி விழும் பலன் பார்ப்போம்.

தலை : பல்லி நமது தலையில் எங்கு விழுந்தாலும் துன்பம் வருவதை குறிக்கிறது, அதை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

கை: வலது கையில் விழுந்தால் துக்கம் வரும், இடது கையில் விழுந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.

மார்பு : பல்லி விழுந்த இடம் வலது மார்பு என்றால் நமக்கு தனலாபம் கிடைக்கும், இடது மார்பில் விழுந்தால் சுகம் உண்டாகும்.

தொடை : இடது தொடையில் பல்லி விழுந்தால் சஞ்சலம் ஏற்படும். வலது தொடையில் என்றால் துக்கம் நிகழும்.

நெற்றி : நெற்றியின் இடது பக்கம் விழுந்தால் கீர்த்தி ஆகும், வலது பக்கம் விழுவதினால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.

கழுத்து : இடது பக்கம் விழுந்தால் நாம் செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும், அதுவே வலது கழுத்தில் பல்லி விழுந்தால் சிலருடன் பகை உண்டாக்குவதை குறிக்கிறது.

பரிகாரம் :

தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு இழ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்க வெள்ளி பல்லியை நினைத்து கொள்ளுவது உத்தமம்.

NeatArticles.com
Enable registration in settings - general