விருத்தாசலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

விருத்தாசலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டனர், இதையடுத்து அவர்கள் வசித்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

ஆலடி ரோட்டில் வசித்து வந்த 38 வயதுடைய நபரும் 60 வயது நபரும் (ஏப்.26) திடீரென உயிரிழந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிப்போர் அனைவரையும் பரிசோதனை நடத்த உத்தரவிட்ட விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், உயிரிழந்தவர்களின் உடலையும் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “இறந்தவர்களில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு நோய் இருந்துள்ளது. மேலும் மற்றொருவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. யாருக்கும் கரோனா தொற்று இல்லை” என தெரிவித்துள்ளார்.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general