இந்த லாக்டவுனில் தங்கள் வீட்டுக்கான கிணறு ஒன்றை தாங்களே தோண்டியுள்ளது ஒரு குடும்பம்.! அபாரம்.!!!

கேரளாவில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 21 நாட்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், இந்த நாட்களை பயன்படுத்தி ஷாஜி நரிக்கோடன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு கிணறு தோண்ட முடிவு செய்தார்கள்.

பயனுள்ளதாகவும் மற்றும் உடற்பயிற்சியாகவும் இருக்கும் என்று தொடங்கி 10 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட இந்த கிணற்றை குடும்பத்திலுள்ள ஐந்து பேரும் ஒரு பைசா கூட செலவழிக்காமல் தோண்டி முடித்தார்கள்.

கிணறு தோண்டுவது எப்படி என்று வேறு யாருக்கும் தெரியாத நிலையில் மனைவியின் ஊக்கத்தில் தயாரானார்கள், பி.எஸ்.சி இறுதி ஆண்டு படிக்கும் மகள், பிளஸ் ஒன் மாணவரான மகன் அபிஜய் மற்றும் செல்போன் கடை நடத்தி வரும் ஷாஜியின் தம்பி ஷானீஷு ஐந்து பேரும் சேர்ந்து வெட்டியுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் கிணறு வெட்ட தேவைப்படும் ஒரு லட்சத்தை மிச்சப்படுத்தியுள்ளனர் இந்த லாக்டவுனில் தங்கள் வீட்டுக்கான கிணறு ஒன்றை தாங்களே தோண்டியுள்ளது ஒரு குடும்பம்.! அபாரம்.!!!

Tags:

NeatArticles.com
Logo
Enable registration in settings - general