கொரோனாவில் இப்படியொரு இதயப்பூர்வமான காதலா?

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலுக்கு மத்தியில், பெரும்பாலான மக்கள் தனிமையில் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் போன ஒருவரின் இதயப்பூர்வமான காதல், இணையத்தில் வைரல் ஆகியது.

இரண்டாம் நிலை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெல்லி ஹாரெல் கோனர் என்பவர் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மருத்துவமனையில் தனது கீமோதெரபி சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் மருத்துவமனைகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கணவருக்கு தனது மனைவியின் கீமோதெரபி சிகிச்சைக்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தம். ஆகையால், அவர் தனது மனைவியின் சிகிச்சையின் போது அவர் மருத்துவமனையின் உள்ளே நுழைய முடியாவிட்டாலும், ஆனால் மனைவி தனியாக இல்லை என்பதை கணவர் உறுதி செய்தார்.

ஆல்பர்ட் தனது மனைவியுடன் தங்குவதற்காக, வேறு காரில் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தினார். அவர் ஒரு நாற்காலியை அமைத்து, ஒரு சுவரொட்டி பலகையை உருவாக்கி, மருத்துவமனையின் ஜன்னலுக்கு வெளியே நின்றார்அந்த சுவரொட்டியின் வாசகம்

“நான் உன்னொடு இல்லை ஆனால் உனக்காக இங்கே இருக்கின்ரேன்” மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒவ்வொரு சிகிச்சையிலும் அவர் தனது மனைவியுடன் இருந்ததாக ஆல்பர்ட் கூறினார், மேலும் நான் ஒவ்வொரு அடியிலும் உன்னோடு இருப்பேன் என்று அவளுக்கு உறுதியளித்தேன். எனது வார்த்தையை மீற நான் விரும்பவில்லை அதனால் மருத்துவமனையின் வெளியே அமர்ந்த அவரது பாசத்தை வெளிக்காட்டினேன். ஆல்பர்ட்டின் மனைவி இதை பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் ஜன்னலுக்கு வெளியே அவர் காதல் இதயப்பூர்வமானது.

மருத்துவமமனை வெளியே அமர்ந்திருக்கும் ஆல்பர்ட்டின் படத்தை எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மருத்துவமனை அவர்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பதிவேற்றியது.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general