டிக்டாக்கில் பரவும் வீடியோ: கொரோனா மருந்து என ஊமத்தங்காய் ஜுஸ் குடித்த 10 பேருக்கு சிகிச்சை

கொரோனா மருந்து என டிக்டாக்கில் வந்த விடியோவை பார்த்து ஊமத்தங்காய் ஜுஸ் செய்து குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இன்னும் அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடவில்லை.

உலக நாடுகளில் உள்ள மருத்துவர்களும் மற்றும் மருத்துவதுறை நிபுணர்களும் கொரோனா மருந்து தொடர்பான பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸை குணபடுத்தும் சில மருந்துகள் இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளன.

இந்நிலையில் நெட்டிசன்கள் கொரோனா மருந்து என தங்களின் மனதில் தோன்றியதை எல்லாம் வதந்திகளாக இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இதுபோன்று இணையதளத்தில் கொரோனா மருந்து தொடர்பாக வரும் செய்திகளை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி கொரோனா மருந்து என எதையும் உபயோகிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்று கொரோனா மருந்து என டிக்டாக்கில் வந்த விடியோவை பார்த்து ஆந்திராவில் ஊமத்தங்காய் ஜுஸ் செய்து குடித்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் ஊமத்தங்காய் ஜுஸ் செய்து குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என டிக்டாக்கில் வந்த விடியோவை பார்த்துவிட்டு உடனே ஊமத்தங்காய் ஜுஸ் தயார் செய்து குடித்த சிறிது நேரத்திலேயே உடல்நல கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

தமிழக அரசு கொரோனா மருந்து என இதுபோன்று எதையும் உட்கொள்ள வேண்டாம் என மக்களிடம் கேட்டுகொண்டுள்ளது.

NeatArticles.com
Logo
Enable registration in settings - general